search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய இளையோர் கராத்தே போட்டியில் தங்கம் வென்று காஷ்மீர் சிறுவன் அசத்தல்
    X

    ஆசிய இளையோர் கராத்தே போட்டியில் தங்கம் வென்று காஷ்மீர் சிறுவன் அசத்தல்

    புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் தங்கம் வென்றுள்ளான்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஹசீம் மன்சூர்(7). நேற்று புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த சிறுவனை வீழ்த்தி ஹசீம் மன்சூர் தங்கப்பதக்கம் வென்றான்.

    தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கு பெற்றனர். இவர்களில் அனைவரையும் வீழ்த்திய ஹசீம் மன்சூர் இறுதியில் தங்கப்பதக்கத்தை தன் வசமாக்கியுள்ளான்.

    இதுகுறித்து ஹசீமின் தந்தை கூறுகையில் "இப்போட்டிக்காக ஹசீம் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டான். அவன் தங்கப்பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி" என்றார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் இத்தாலியில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற காஷ்மீர் சிறுமி தாஜ்முல் இஸ்லாம், ஹசீம் மன்சூர் இருவரின் பயிற்சியாளரும் ஒருவரே (பைசல் அலி) என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×