search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடக்க வீரராக பார்த்தீவ் பட்டேல் நீடிப்பார்: விராட் கோலி
    X

    தொடக்க வீரராக பார்த்தீவ் பட்டேல் நீடிப்பார்: விராட் கோலி

    இங்கிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த 3-வது டெஸ்ட்டில் அதிரடியாக விளையாடிய பார்த்தீவ் பட்டேல் தொடக்க வீரராக நீடிப்பார் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    மொகாலி:

    இங்கிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    103 ரன் இலக்குடன் விளையாடிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றதால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    மொகாலி டெஸ்டில் பெற்ற வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    கடந்த ஒரு ஆண்டாகவே சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ‘பிட்ச்‘ குறித்து கேள்வி கேட்கப்படுகிறது. ஆடுகளம் குறித்து நாங்கள் அதிகமாக எதுவும் சொல்ல தேவையில்லை. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறோம். இதனால் வெற்றிகளை பெற்று வருகிறோம்.

    பார்த்தீவ் பட்டேல் இந்த டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு இன்னிங்சிலும் அவர் அபாரமாக ஆடினார். முதல்தர போட்டியில் நன்றாக விளையாடிய அனுபவம் அவருக்கு கை கொடுத்தது.

    வேகப்பந்து வீச்சை அவர் நம்பிக்கையுடன் எதிர் கொண்டு விளையாடினார். பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டிலும் அபாரமாக செயல்பட்டார்.

    எதிர்கால இந்திய அணியில் இடம் பெறுவதற்கான நேர்மையை பெற்றுள்ளார். இதனால் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் போட்டி நிலவும். பார்த்தீவ் பட்டேல் தொடக்க வீரராக நீடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பரான விருத்திமான் சகா காயம் அடைந்ததால் பார்த்தீவ் பட்டேல் இடம் பெற்றார். குஜராத்தை சேர்ந்த 31 வயதான அவர் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு டெஸ்டில் ஆடினார். மொகாலி டெஸ்டில் அவர் மொத்தம் 109 ரன் எடுத்தார்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்னும், 2-வது இன்னிங்சில் 67 ரன்னும் (அவுட்இல்லை) எடுத்தார்.

    லோகேஷ் ராகுல் காயம் அடைந்ததால் முரளி விஜய்யுடன் தொடக்க வீரராக ஆடி முத்திரை பதித்தார். காம்பீர் தொடக்க வீரர் வரிசையில் பிரகாசிக்காததால் நீக்கப்பட்டார்.

    தவானும் நல்ல நிலையில் இல்லை. இதனால் மாற்று தொடக்க வீரர் வரிசையில் தற்போது பார்த்தீவ் பட்டேல் உள்ளார்.

    அதே நேரத்தில் டெஸ்ட் அணியின் எங்களது முதன்மை விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

    மும்பையில் நடைபெறும் 4-வது டெஸ்டுக்கு ராகுலும், விருத்திமான் சகாவும் உடல் தகுதி பெறும் பட்சத்தில் வீரர்கள் தேர்வு கோலிக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
    Next Story
    ×