search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வருவோம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் சொல்கிறார்
    X

    ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வருவோம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் சொல்கிறார்

    முதல் நாளில் விக்கெட்டுக்களை இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று பேர்ஸ்டோவ் கூறியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் இன்று தொடங்கியது. மொகாலி ஆடுகளம் சுழற்பந்து பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தால் 4-வது மற்றும் கடைசி நாளில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று  கருதப்பட்டது.

    இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. அப்போதே இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று கருதப்பட்டது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் மட்டும் தாக்குப்பிடித்து 89 ரன்கள் சேர்த்தார். இன்றைய ஆட்டம் குறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில், டாஸ் வென்ற நல்ல வாய்ப்பை விக்கெட்டுக்களை இழந்து தவற வி்ட்டுவிட்டோம் என்றார்.

    மேலும் பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘டாஸ் வென்ற பின்னர், விக்கெட்டுக்களை இழந்தது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் இது பேரழிவான நாள். விரைவில் விக்கெட்டுக்களை இழந்தது எங்களுக்கு ஏமாற்றம் தந்தது. நாளை காலை செசனில் நாங்கள் ஓரளவிற்காவது பேட்டிங் செய்ய வேண்டும். இல்லையெனில் கடிமான பந்து வீச வேண்டும்.

    ஆடுகளம் முதல் நாள் ஆட்டத்திற்கு ஏற்ற வகையில் சிறந்த வகையில் சென்று கொண்டிருந்தது. நாளைக்கும் இதுபோன்றே இருக்கலாம். ஆனால், ஆடுகளத்தில் ஏதிர்பாராத பவுன்சஸ் இருப்பதை நாங்கள் பார்த்தோம். முதல் நாள் முழுவதும் இந்த பவுன்ஸ் இருந்தது. நாங்கள் போராடி வருகிறோம். இது எங்களுக்கு மோசமான நாள்தான். ஆனால், இதுபோன்ற மோசமான நிலையை இதற்கு முன்னரும் நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×