search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளைய ஆடுகளம் பேட்டிங்கின் சொர்க்கபுரியாக விளங்கும்: விசாகப்பட்டினம் பிட்ச் பராமரிப்பாளர் சொல்கிறார்
    X

    நாளைய ஆடுகளம் பேட்டிங்கின் சொர்க்கபுரியாக விளங்கும்: விசாகப்பட்டினம் பிட்ச் பராமரிப்பாளர் சொல்கிறார்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கும் நாளைய போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கின் சொர்க்கபுரியாக விளங்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 190 ரன்னில் சுருண்டது. இந்தியா 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் நியூசிலாந்து அணி 242 ரன்கள் எடுத்தது. இந்தியா 236 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    மொகாலியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 286 ரன்கள் சேர்த்தது. இந்தியா 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற 4-வது போட்டியில் நியூசிலாந்து அணி 260 ரன்கள் சேர்த்தது. இந்தியா 241 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த நான்கு போட்டிகளிலும் ஸ்கோர் 300-ஐ தாண்டவில்லை. பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க திணறினார்கள் என்றே கூற வேண்டும். மொகாலியில் மட்டும்தான் 280-ரன்களை தாண்டியுள்ளது.

    தற்போதைய நிலையில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று 2-2 என சமநிலையில் உள்ளது. தொடரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுகிறது.

    இந்த மைதானமும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஏனெனில், இரண்டு வாரங்களுக்கு முன் அஸ்ஸாம் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டி இங்கு நடைபெற்றது. அப்போது அஸ்ஸாம் அணி 2-வது இன்னிங்சில் 69 ரன்களில் சுருண்டது. ஐந்து பேட்ஸ்மேன்கள் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். மூன்று பேர் மட்டுமே இரண்டு இலக்க ரன் எடுத்தார்கள்.

    இதனால்தான் இந்த போட்டியும் குறைந்த ஸ்கோர் உள்ளதாக இருக்கும் என அஞ்சுகிறார்கள். ஆனால், விசாப்பட்டினம் ஆடுகள பராமரிப்பாளர், இங்கு 280 முதல் 300 ரன்கள் வரை குவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் கே. நாகமல்லையா மேலும் கூறுகையில் ‘‘ஆடுகளத்தின் மேற்பகுதி கடினமாக உள்ளது. ஆடுகளத்தை தயார் படுத்துவதற்கு எங்களுக்கு தேவையான நேரம் கிடைத்தது. 280 முதல் 300 ரன்கள் வரை அடிக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×