search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்காவில் ஆஸி. தலைமை பாதுகாப்பு அதிகாரி: இங்கிலாந்து தொடர் ஏற்பாடு குறித்து ஆய்வு
    X

    டாக்காவில் ஆஸி. தலைமை பாதுகாப்பு அதிகாரி: இங்கிலாந்து தொடர் ஏற்பாடு குறித்து ஆய்வு

    டாக்காவில் இங்கிலாந்து - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ஆஸி. கிரிக்கெட் வாரிய பாதுகாப்பு அதிகாரி இங்கு வந்துள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. வங்காள தேசத்திற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் புறப்படும் நேரத்தில், வங்காள தேசத்தில் தீவிரவாத அமைப்புகளால் ஆஸ்திரேலிய மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் வங்காள தேச சுற்றுப் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்தது.

    இதனால் ஆஸ்திரேலியா அணி வங்காள தேசம் என்று விளையாட தயக்கம் காட்டியது. பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருந்தாலும், தொடர் ரத்து செய்யப்பட்டது ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை.

    தற்போது இங்கிலாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வங்காள தேசத்தில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டல் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், 20-க்கும் மேற்பட்டோரின் தலையை அறுத்துக் கொலை செய்தனர்.

    இதனால் இங்கிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், வங்காள தேசம் வரும் இங்கிலாந்து அணிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியமும், அரசும் உத்தரவாதம் அளித்தது.

    இதனால் இங்கிலாந்து அணி வங்காள தேசம் சென்று விளையாடி வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் வங்காள தேசம் சென்று விளையாட ஆர்வம் காட்டி வருகிறது.

    தள்ளிப்போன டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. தற்போது வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணிக்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிந்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி டாக்கா வந்துள்ளார். அவர் இங்கிலாந்து அதிகாரிகளுடன் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார். இன்று சில நாட்கள் வங்காள தேசத்தில் தங்கியிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார்.

    ‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு தலைமை அதிகாரி சீன் கர்ரோலின் வருகை ஊக்கமளிக்கிறது’’ என்று வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிசாமுதீன் சவுத்ரி கூறியுள்ளார்.
    Next Story
    ×