search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் ஒலிம்பிக்கில் வென்று ஊக்க மருந்தில் சிக்கிய 3 கஜகஸ்தான் வீராங்கனைகளின் தங்கப்பதக்கம் பறிப்பு
    X

    லண்டன் ஒலிம்பிக்கில் வென்று ஊக்க மருந்தில் சிக்கிய 3 கஜகஸ்தான் வீராங்கனைகளின் தங்கப்பதக்கம் பறிப்பு

    லண்டன் ஒலிம்பிக்கில் வென்று ஊக்க மருந்தில் சிக்கிய 3 கஜகஸ்தான் வீராங்கனைகளின் தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஜூரிச் :

    சமீபத்தில் ரஷிய வீரர்-வீராங்கனைகள் மீது எழுந்த ஊக்க மருந்து குற்றச்சாட்டை தொடர்ந்து 2008-ம் ஆண்டு (பீஜிங்) மற்றும் 2012-ம் ஆண்டு (லண்டன்) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகளிடம் இருந்து எடுத்து சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் ரத்த மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இதில் 98 பேரின் மாதிரிகள் மறுபரிசோதனையில் தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது அவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பதக்கம் வென்றவர்களும் அடங்குவார்கள். ஊக்க மருந்து மறுபரிசோதனையில் ரஷியா, பெலாரஸ், உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த பளுதூக்குதல், மல்யுத்தம், தடகள வீரர்-வீராங்கனைகள் அதிக அளவில் சிக்கி இருக்கிறார்கள்.

    ஊக்க மருந்து சோதனையில் சிக்கியவர்களிடம் விசாரணை நடத்தி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனைகள் சுல்ப்யா சின்ஷான்லோ (53 கிலோ), மையா மானெஜா (63 கிலோ), ஸ்வெட்லானா (75 கிலோ) ஆகியோரின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 6 பேர் உள்பட 9 வீரர், வீராங்கனைகள் முன்தேதியிட்டு தகுதி இழந்தவர்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
    Next Story
    ×