search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிதியை பயன்படுத்தாது: சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ தகவல்
    X

    மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிதியை பயன்படுத்தாது: சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ தகவல்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதியை மாநில கிரிக்கெட் சங்கங்கள் பயன்படுத்தாது என சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழு பல்வேறு பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பி.சி.சி.ஐ.க்கு உத்தரவிட்டது.

    லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அதை ஏற்க மறுப்பதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் முறையிடப்பட்டது.

    இதை தொடர்ந்து லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாத வரை மாநில சங்கங்களுக்கு நிதி வழங்க தடை விதித்து பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு சமீபத்தில் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த போது மறு உத்தரவு வரும் வரை 12 மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிதியை பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்து இருப்பதாக பி.சி.சி.ஐ தெரிவித்தது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொது மேலாளர் (நிர்வாகம் மற்றும் மேம்பாடு) ரத்னாகா ஷெட்டி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.

    ஆந்திரா, குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மராட்டியம், மும்பை, பஞ்சாப், சவுராஸ்டிரா, தமிழ்நாடு, உத்திரபிரதேசம் ஆகிய 12 மாநில கிரிக்கெட் சங்கங்கள் கடிதம் எழுதி இருப்பதாகவும் பி.சி.சி.ஐ.யின் நிதியை சுப்ரீம் கோர்ட்டின் மறு உத்தரவு வரும் வரை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்து இருப்பதாகவும் பி.சி.சி.ஐ தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×