search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
    X

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வருகிற 29-ந்தேதியுடன் நியூசிலாந்து போட்டி முடி வடைகிறது

    இதன் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    நவம்பர் 9-ந்தேதி ராஜ் காட்டில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது. டிசம்பர் 16-ந்தேதி சென்னையில் கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. பின்னர் இங்கிலாந்து அணி நாடு திரும்பி ஜனவரி மாதம் மீண்டும் இந்தியா வந்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வங்காளதேச தொடரில் விளையாடிய வீரர்கள் அப்படியே இடம் பெற்று உள்ளனர். அந்த அணி வங்காளதேசத்தில் இருந்து இந்தியா வருகிறது.

    தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீரரான ஆண்டர்சன் வங்காளதேச தொடரில் ஆடவில்லை. அதில் இருந்து அவர் இன்னும் குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடவில்லை. விசாகப்பட்டினத்தில் 17-ந்தேதி தொடங்கும் 2-வது டெஸ்டிலும் அவர் விளையாடுவது சந்தேகமே 3-வது டெஸ்டில் இருந்து அவர் அணியோடு இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். வேகப்பந்து வீரரான அவர் 463 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:-

    அலிஸ்டர்கூக் (கேப்டன்), மொய்ன் அலி, ஜாபர் அன்சாரி, பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜேக்பால், பேலன்ஸ், கரேத் பேட்டி, ஸ்டூவர்ட் பிராட், பட்லர் (விக்கெட் கீப்பர்), பென்டக்கெட், ஸ்டீவன் பின், ஹசீப்ஹமீது, ஆதில் ரஷீத், ஜோரூட், பென்ஸ்டோக்ஸ், கிறிஸ்வோகஸ்.

    Next Story
    ×