search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டத்தை நிறைவு செய்வதில் விராட் கோலி சிறந்தவர்: கங்குலி பாராட்டு
    X

    ஆட்டத்தை நிறைவு செய்வதில் விராட் கோலி சிறந்தவர்: கங்குலி பாராட்டு

    ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நியூசிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரை பற்றி புகழ வார்த்தைகளே வறண்டு விட்டது. 154 ரன் குவித்தது மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆகும். அவர் இது மாதிரியே விளையாட வேண்டும்.

    ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் வெறும் சதங்களை மட்டும் எடுப்பதில்லை. ஆட்டத்தையே வென்று கொடுக்கிறார். நிறைவு செய்வதில் அவருக்கு இணையான வீரர் யாரும் இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா என்று வெளி இடங்களில் ஆடுகிறார்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட்கோலி, டோனி ஆகியோர் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்கள். கோலி மற்றவர்களை காட்டிலும் பல மைல்கள் தொலைவில் உள்ளார். ஆனால் டோனியுடன் ஒப்பிட இயலாது.

    துணை கண்டத்துக்கு வெளியே டோனி சதம் அடித்ததாக நினைவில் இல்லை. ஆனால் கோலி எல்லா இடங்களிலும் செஞ்சூரி எடுத்தார். இதனால் யாரும் அவர் பக்கத்தில் நெருங்க இயலாது.

    மொகாலி போட்டியில் டோனி 4-வது வீரராக ஆடியதால் இந்தியாவின் வெற்றி எளிதாக இருந்தது. அவர் தொடர்ந்து அதே வரிசையில் ஆட வேண்டும். ஆனால் 4-வது வரிசையில் தொடர்ந்து இறங்குவாரா என்று உறுதியாக கூற முடியவில்லை. பயிற்சியாளர் கும்ப்ளே இதே வரிசையில் ஆட வலியுறுத்த வேண்டும்.

    டோனி கடைசி 3 ஆண்டுகளில் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. காரணம் அவர் குறைவான பந்துகளையே சந்திக்க முடிந்தது. இது அவரது திறமைகளும் அணியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 4-வது வரிசையில் அவர் அபாரமாக ஆடுகிறார். தொடர்ந்து அந்த வரிசையில் ஆட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×