search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? நாளை 4-வது ஒருநாள் போட்டி
    X

    நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? நாளை 4-வது ஒருநாள் போட்டி

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    ராஞ்சி:

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக் கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    5 ஒருநாள் போட்டித் தொடரில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 6 ரன்னில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. இந்திய வீரர்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    மொகாலி போட்டியில் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. 286 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. வீராட்கோலியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 3 ஆட்டத்தில் 248 ரன் எடுத்துள்ளார். ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடங்கும். அவரது ஆட்டத்தை பொறுத்தே ரன் குவிப்பு இருக்கிறது. இந்திய அணி அவரையே பெரிதும் நம்பி இருக்கிறது.

    இதேபோல கேப்டன் டோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெருக்கடியில் இருந்து மீட்டார். முன்னதாக களம் இறங்கியது அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது.

    தொடக்க வீரர்களான ரோகித்சர்மா, ரகானே ஆட்டம் ஒருநாள் தொடரில் எடுபடவில்லை. இதனால் இருவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இளம் வீரர்களான கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் உமேஷ் யாதவ் (6 விக்கெட்), அமித்மிஸ்ரா (8 விக்கெட்) முத்திரை பதிக்கும் வகையில் உள்ளனர்.

    ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்துடன் திகழ்கிறது.

    நியூசிலாந்து அணியில் டாம் லாதம் (186 ரன்), கேப்டன் வில்லியம்சன் (143) டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தொடக்க வீரர் குப்தில் மோசமான நிலையில் இருப்பது அந்த அணியின் பேட்டிங்கில் பலவீனத்தை காட்டுகிறது. பந்துவீச்சில் சவுத்தி, போல்ட் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 48 போட்டியிலும், நியூசிலாந்து 42 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை. 1 போட்டி ‘டை’ ஆனது.

    நாளைய ஆட்டம் பகல்-இரவாக பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ரகானே, வீராட்கோலி, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர்பட்டேல், அமித் மிஸ்ரா, பும்ரா, உமேஷ்யாதவ், மன்தீப் சிங், குல்கர்னி, ஜெயந்த் யாதவ்.

    நியூசிலாந்து: வில்லியம் சன் (கேப்டன்), குப்தில், லாதம், ரோஸ் டெய்லர், ஆண்டர்சன், ரோஞ்சி, ஜேம்ஸ் நீசம், சான்ட்னெர், பிரேஸ்வெல், சவுத்தி, சோதி, போல்ட், மேட் ஹென்றி, ஆண்டன் டேவிச், வாட்லிங்.

    Next Story
    ×