search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோதா - பி.சி.சி.ஐ. இடையே சமரசம் ஏற்படும் வரை ஐ.பி.எல். ஒளிபரப்பு ஏலம் தள்ளிப்போக வாய்ப்பு
    X

    லோதா - பி.சி.சி.ஐ. இடையே சமரசம் ஏற்படும் வரை ஐ.பி.எல். ஒளிபரப்பு ஏலம் தள்ளிப்போக வாய்ப்பு

    லோதா - பி.சி.சி.ஐ. இடையே சமரசம் ஏற்படும் வரை ஐ.பி.எல். தொடருக்கான ஒளிபரப்பு டெண்டர் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
    லோதா கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்ற பி.சி.சி.ஐ. தயக்கம் காட்டி வருகிறது. இதனால் கடந்த 21-ந்தேதி லோதா கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து அனுராக் தாகூர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில் நாளை ஐ.பி.எல். தொடரை ஒளிப்பரப்பும் உரிமத்திற்கான டெண்டர் திறக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் மீடியா ஒளிபரப்பபு உரிமத்திற்கு டுவிட்டர், பேஸ்புக் உள்பட 18 நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளன.

    நாளை டெண்டர் திறக்கப்படும் என்பதால், தற்போதைய நிலையில் இதற்கு பிரச்சினை ஏதும் வருமா? என்று பி.சி.சி.ஐ. தரப்பில் லோதா கமிட்டியிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு லோதா கமிட்டி அளித்த பதிலில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி லோதா கமிட்டி பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்று கடிதம் கொடுத்தால் டெண்டருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயத்தில் டெண்டர் நடைமுறை தள்ளிப்போகும் அளவிற்கு எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பி.சி.சி.ஐ, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் மீண்டும் லோதா - பி.சி.சி.ஐ.-க்கு இடையே யுத்தம் நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×