search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பிரேசிலுடன் மோதும் அர்ஜென்டினா அணியில் மெஸ்சி
    X

    உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பிரேசிலுடன் மோதும் அர்ஜென்டினா அணியில் மெஸ்சி

    உலகக்கோப்பை தகுதிச் சுற்றி்ல் பிரேசில் அணிக்கெதிரான அர்ஜென்டினா அணியில் மெஸ்சி சேர்க்கப்பட்டுள்ளார்.
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லயனோல் மெஸ்சி. இவர் தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டி, கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. ஆனால், இறுதிப் போட்டியில் அதிர்ஷ்டம் இல்லாம் தோல்வியடைந்தது. இதனால் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மெஸ்சியின் முடிவு குறித்து அதிர்ச்சி அடைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் அர்ஜென்டினா அரசு மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட வேண்டும் என்று மெஸ்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் மெஸ்சி சர்வதேச போட்டிக்கு திரும்பினார்.

    ஆனால் இதுவரை அர்ஜென்டினா அணிக்கெதிராக களம் இறங்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் பார்சிலோனா அணிக்காக விளையாடும்போது மெஸ்சிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உருகுவே மற்றும் பெரு அணிக்ளுக்கெதிரான போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.

    தற்போது காயம் குணமடைந்து மெஸ்சி பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சனிக்கிழமை டெபோர்டிவோ லா கொருனா அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது. மேலும், கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிராக 4-0 என பெற்றி பெற்றது. இதில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.

    இந்நிலையில் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நவம்பர் 10-ந்தேதி பிரேசில் அணியை சந்திக்கிறது. அதன்பின ஒரு வாரத்திற்குப் பிறகு கொலம்பியா அணியுடன் மோத இருக்கிறது. இதற்கான அர்ஜென்டினா அணியில் மெஸ்சி இடம்பிடித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்று உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்கா மண்டலத்தில் உள்ள அணிகள் தகுதிச் சுற்றில் மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடங்கள் பெறும் அணி நேரடியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். தற்போது அர்ஜென்டினா 10 போட்டிகள் முடிவில் 16 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×