search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U-17 உலகக்கோப்பை: கோவாவில் போட்டியை நடத்த பிபா பிரதிநிதிகள் ஒப்புதல்
    X

    U-17 உலகக்கோப்பை: கோவாவில் போட்டியை நடத்த பிபா பிரதிநிதிகள் ஒப்புதல்

    17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. தற்போது கோவாவில் போட்டியை நடத்த பிபா சம்மதம் தெரிவித்துள்ளது.
    அடுத்த ஆண்டு இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், போட்டி நடைபெறும் இடங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உலகக்கோப்பை போட்டி என்பதால் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மைதானங்கள் இருக்க வேண்டும் என்று பிபா கருதுகிறது.

    இதனால் பிபா அமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மைதானங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே, கொச்சி மற்றும் நவி மும்பையில் போட்டியை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று கோவா சென்று மைதானத்தை ஆய்வு செய்தது. அப்போது பிபா பிரதிநிதிகளுக்கு மைதானம் திருப்தி அளித்ததால், போட்டியை நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவாவில் கடந்த பிப்ரவரி மாதம் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய தகுதிச்சுற்றின் நான்கு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை சிறப்பாக செய்து முடித்ததன் காரணமாக கோவா மைதானத்திற்கு பிபா பிரதிநிதிகள் ஒப்பதல் வழங்கியுள்ளனர்.

    பிபா பிரதிநிதிகள் நாளை டெல்லி சென்று ஜவர்கலால் நேரு மைதானத்தை ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
    Next Story
    ×