search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலககோப்பை கபடி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
    X

    உலககோப்பை கபடி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

    உலககோப்பை கபடியின் அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஈரான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
    ஆமதாபாத்:

    3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இரண்டாது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இரவு 9 மணியில் இந்த போட்டி நடைபெற்றது.

    தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 36-8 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே நிலவியது. இறுதியில் 73-20 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    முன்னதாக இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஈரான் மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதின.

    இதனால் முதல் பாதியில் தென் கொரியா அணி 13-11 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இருப்பினும் இரண்டாவது பதியில் சுதாகரித்து ஆடிய ஈரான் அணி 28-22 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

    இதனையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஈரானை எதிர்கொள்கிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×