search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப்டன் பதவியை டேரன் சமியிடம் ஒப்படைத்த ஷாகித் அப்ரிடி
    X

    கேப்டன் பதவியை டேரன் சமியிடம் ஒப்படைத்த ஷாகித் அப்ரிடி

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான பெஷாவர் ஷல்மி அணியின் கேப்டன் பதவியை டேரன் சமியிடம் ஒப்படைத்தார் ஷாகித் அப்ரிடி.
    இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்கள் பிரபலம் அடைந்ததையொட்டி பாகிஸ்தானும் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ தொடரை கடந்த வருடம் ஆரம்பித்தது.

    பாகிஸ்தான் சென்று விளையாட வெளிநாட்டு வீரர்கள் மறுப்பு தெரிவிப்பதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் (துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி) இந்த லீக் தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடரில் ஐந்து அணிகள் கலந்து கொண்டது. இதில் பெஷாவர் ஷல்மி அணியும் ஒன்று. இந்த அணியின் கேப்டனாக ஷாகித் அப்ரிடி இருந்து வந்தார். 2016 சீசனில் அரையிறுதி வரை சென்ற பெஷாவர் அணி இஸ்லாமாபாத்திடம் தோல்வியடைந்தது.

    இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 2-வது தொடருக்கான வீரர்களின் ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் ஐந்து அணிகளும் சில வீரர்களை தக்கவைத்துக் கொண்டு சில வீரர்களை வெளியில் அனுப்பியது. ஏலம் மூலம் புதிய வீரர்களையும் எடுத்துக் கொண்டது.

    இந்த நிலையில் பெஷாவர் ஷல்மி அணியின் கேப்டன் பதவியை அபிரிடி, சமியிடம் கொடுத்துள்ளார். சமி வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுமுறை டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும்போது கேப்டனாக இருந்தவர். மேலும், கரீபியன் பிரிமீயர் லீக் தொடரிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    பெஷாவர் இந்த வருடம் மோர்கன் (இங்கிலாந்து), ஹாரிஸ் சோகைல், அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), மொகமது ஷேசாத் (ஆப்கானிஸ்தான்), இர்பான் கான், குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, சாகிப் அல் ஹசன் (வங்காள சேதம்), சோகைப் மெக்சூட் ஆகியோரை புது வீரர்களாக எடுத்துள்ளது.

    அப்ரிடி, வகாப் ரியாஸ், டேரன் சமி (வெஸ்ட் இண்டீஸ்), மொகமது ஹபீஸ், கிறிஸ் ஜோர்டான் (இங்கிலாந்து), தமீம் இக்பால் (வங்காள சேதம்), கம்ரான் அக்மல், ஜூனைத் கான், இம்ரான் கான், ஹசன் அலி, மொகமது அஸ்கார் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×