search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
    X

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2016-17 சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் இந்தியா விளையாடி விட்டது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதன்பின் வங்காள தேசத்திற்கு எதிராக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரேயொரு டெஸ்டில் விளையாடுகிறது.

    அதன்பின் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நான்கு போட்டிகளும் புனே, பெங்களூர், ராஞ்சி மற்றும் தரம்சாலாவில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை புனேவில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பெங்களூரில் நடக்கிறது. 3-வது போட்டி 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ராஞ்சியில் நடைபெறுகிறது. நான்காவது மற்றும் கடைசி போட்டி 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தரம்சாலாவில் நடைபெறுகிறது. இதில் புனே, ராஞ்சி, தரம்சாலா ஆகிய மைதானங்களில் முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது.

    பார்டர் - கவாஸ்கர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டு தொடரை இந்தியா 4-0 எனக் கைப்பற்றியது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை முதன்முறையாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா 2-1 என கைப்பற்றியது.
    Next Story
    ×