search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி அளிக்க தடை: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு அதிரடி உத்தரவு
    X

    மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி அளிக்க தடை: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு அதிரடி உத்தரவு

    லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்காத மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிதி அளிக்க கூடாது என சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லோதா கமிட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை சிபாரிசு செய்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. லோதா கமிட்டி பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் பல்வேறு பரிந்துரைகளை ஏற்க தயக்கம் காட்டிய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது.

    இதற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம்கோர்ட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், பரிந்துரைகளை ஏற்காத மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி அளிக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தாகூர் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:-

    * லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்று மாநில கிரிக்கெட் சங்கங்கள் பதில் மனு தாக்கல் செய்யாத வரை அச்சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிதி உதவி அளிக்க கூடாது.

    * கிரிக்கெட் வாரிய நிர்வாக கணக்குகள், பண பரிவர்த்தனைகளை ஆராய லோதா கமிட்டி தனியாக ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும்.

    * மேலும் ஆடிட்டர்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உயர் அளவிலான ஒப்பந்தங்களையும் ஆராய வேண்டும்.

    * கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் லோதா கமிட்டி பரிந்துரைகளையும், கோர்ட்டு உத்தரவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் லோதா கமிட்டி முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

    * லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தியது தொடர்பாக அனுராக் தாகூர், செயலாளர் ஆகியோர் பிரமாண பத்திரங்களை டிசம்பர் 3-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்த விசாரணை டிசம்பர் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
    Next Story
    ×