search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் டெஸ்டில் மோத வேண்டும்: யூனுஸ்கான் விருப்பம்
    X

    இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் டெஸ்டில் மோத வேண்டும்: யூனுஸ்கான் விருப்பம்

    இந்தியா- பாகிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி தொடரை மீண்டும் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
    அபிதாபி:

    மும்பை தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டி தொடரில் மோதுவதை தவிர்த்து வருகிறது. இரு அணிகள் இடையே டெஸ்ட் போட்டி தொடர் நடத்த படவில்லை. 2012-13-ம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தான் அணி ஒரு நாள் போட்டியில் விளையாடியது.

    ஆனால் அதன்பின் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை ஊடுருவ செய்து தாக்குதல் நடத்தியதால் கிரிக்கெட் போட்டியை முற்றிலும் துண்டித்து உள்ளது. பொதுவான இடத்தில் இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டிகளை நடத்த இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்தன. இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

    இந்த நிலையில இந்தியா- பாகிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி தொடரை மீண்டும் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் நாட்டில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் நடத்த வேண்டும். இந்தியா மற்றும் அனைத்து அணிகளுடன் மோத வேண்டும் என்பது எனது விருப்பம். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள். டெஸ்ட்டில் முதல் இரண்டு இடங்களில் உள்ளார். இரு நாடுகள் இடையே எந்த மாதிரியான சூழ்நிலை நிலவினாலும் அதை மறந்துவிட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும்.

    இரு அணிகளும் மோதுவதை பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் இரு அணிகள் எப்போதாவது மோதினால் அந்த போட்டியை ஆர்வம் இல்லாமல் பார்க்கிறார்கள். இதனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அடிக்கடி மோத வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×