search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 137-வது இடத்துக்கு முன்னேற்றம்
    X

    உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 137-வது இடத்துக்கு முன்னேற்றம்

    உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 11 இடங்கள் ஏற்றம் பெற்று 137-வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
    புதுடெல்லி :

    உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய அணி 148-வது இடத்தில் இருந்து 11 இடங்கள் ஏற்றம் பெற்று 137-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த மாதம் மும்பையில் நடந்த சர்வதேச நட்புறவு போட்டியில் 114-வது இடத்தில் இருக்கும் பியூர்டோரிகோ அணியை வென்றதன் மூலம் 230 புள்ளிகளை பெற்றதால் இந்திய அணியின் தர வரிசையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த தரவரிசை இதுவாகும்.

    அர்ஜென்டினா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
    Next Story
    ×