search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் சாதனை துளிகள்
    X

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் சாதனை துளிகள்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் சாதனை துளிகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
    புதுடெல்லி :

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. அதில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

    * இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த 3-வது நியூசிலாந்து கேப்டன் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்றார். இதற்கு முன்பு கிளைன் டர்னர்-114 ரன் (1975-ம் ஆண்டு), கென் ரூதர்போர்டு-108 ரன் (1994-ம் ஆண்டு) ஆகியோர் சதம் கண்ட நியூசிலாந்து கேப்டன்கள் ஆவர்.

    * 15 ரன்களில் கேட்ச் ஆன இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இடது கையில் வலியால் அவதிப்படுகிறார். வேதனையுடன் வெளியேறிய அவர் அடுத்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    * டெல்லி மைதானத்தில் டோனியின் தலைமையில் 7-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய இந்திய அணி, அதில் சந்தித்த முதல் தோல்வி இது தான்.

    * இந்திய மண்ணில், ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை நியூசிலாந்து சாய்ப்பது 2003-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
    Next Story
    ×