search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
    X

    பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

    பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்குகிறது
    அபுதாபி:

    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் துபாயில் பகல்-இரவாக நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்குகிறது. டெங்கு காய்ச்சலால் முதலாவது டெஸ்டில் ஆடாத பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் அணிக்கு திரும்பி இருக்கிறார். துபாய் டெஸ்டில் மொத்தம் 22 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் சிக்கியது போன்று, இந்த ஆடுகளத்திலும் சுழற்பந்து வீச்சின் தாக்கமே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×