search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆடவில்லை
    X

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆடவில்லை

    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் கூக் தெரிவித்தார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

    முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் விளையாடவில்லை. இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார். இதை அந்த அணியின் கேப்டன் கூக் உறுதி செய்தார். ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார்.
    Next Story
    ×