search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனிஷ் பாண்டே 4-வது வீரராக ஆடுவார்: கும்ப்ளே ஆதரவு
    X

    மனிஷ் பாண்டே 4-வது வீரராக ஆடுவார்: கும்ப்ளே ஆதரவு

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் மனிஷ் பாண்டே 4-வது வீரராக ஆடுவார் என்று இந்திய அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி டெல்லி பெரோசா கோடலா மைதானத்தில் இன்று நடக்கிறது.

    முதல் போட்டியை எளிதில் வென்றது போல இன்றைய ஆட்டத்திலும் வெல்ல வேண்டும் என்ற வேட்டையில் இந்தியா உள்ளது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    தர்மசாலாவில் நடந்த போட்டியில் 4-வது வீரராக களம் இறங்கிய மனிஷ் பாண்டே 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். ரெய்னா காய்ச்சல் காரணமாக ஆட முடியாததால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்றைய ஆட்டத்திலும் இதே நிலைதான் நீடித்தது.

    இதற்கிடையே மனிஷ் பாண்டேயின் பேட்டிங் வரிசை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எடுத்துள்ளது. ஆனால் இதை பயிற்சியாளர் கும்ப்ளே நிராகரித்தார்.

    மனிஷ் பாண்டே 4-வது வீரராகதான் ஆடுவார் என்று அவருக்கு கும்ப்ளே தனது ஆதரவை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மனிஷ் பாண்டே 4-வது வீரர் வரிசையில் தான் ஆடுவார். அதில் மாற்றம் இல்லை. சமீப காலங்களில் அவர் 4-வது வரிசையில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

    மிடில் வரிசையில் ஆட்டத்தை நிறுத்துவதில் குறைவான நேரமே இருக்கிறது. தர்மசாலாவில் அவரது ஆட்டம் தொடக்கத்தில் நன்றாக இருந்தது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்.

    தொடக்க வீரர் வரிசைக்கு தற்போது ரகானே பொருத்தமானவர். தவான், ராகுல் உடல் தகுதியுடன் இல்லாததால் தொடக்க வீரர் வரிசைக்கு அவர் தான் தற்போது பொருத்தமானவர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்படும்.

    டோனி அனுபவம் வாய்ந்தவர். ஆட்டத்தை நிறைவு செய்வதில் சிறந்தவர். அவர் தற்போதுள்ள 5-வது வரிசையிலேயே ஆடுவார். ஹார்த்திக் பாண்டியாவுக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கவில்லை.

    இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.
    Next Story
    ×