search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை பதம் பார்த்தது வங்காளதேசம்
    X

    ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை பதம் பார்த்தது வங்காளதேசம்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது
    மிர்புர்:

    வங்காளதேசம்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக மக்முதுல்லா 75 ரன்களும், கேப்டன் மோர்தசா 44 ரன்களும் விளாசினர்.

    அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, வங்காளதேசத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி கண்டது. வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மோர்தசா 4 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. கடைசி ஒரு நாள் போட்டி சிட்டகாங்கில் நாளை மறுதினம் நடக்கிறது.

    Next Story
    ×