search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின், ஜடேஜாவுடன் ‘ஹீட்’டையும் சேர்த்து சமாளிக்க வேண்டியுள்ளது: நியூசி. பேட்ஸ்மேன் சொல்கிறார்
    X

    அஸ்வின், ஜடேஜாவுடன் ‘ஹீட்’டையும் சேர்த்து சமாளிக்க வேண்டியுள்ளது: நியூசி. பேட்ஸ்மேன் சொல்கிறார்

    அஸ்வின், ஜடேஜா சுழற்பந்துடன் ஹீட்டையும் (வெப்பம்) சேர்த்து சமாளிக்க வேண்டியுள்ளது என்று நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லாதம் கூறியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    நியூசிலாந்தில் வெப்பம் எப்பொழும் 14 டிகிரியில் இருந்து 16 டிகிரி வரைதான் இருக்கும். ஆனால், இந்தியாவில் 30 டிகிரி வரை இருக்கிறது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் கடும் பாதிப்புள்ளாகின்றனர். அவர்கள் இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு நீண்ட நேரம் களத்தில் இருப்பதை விட, வெயிலுக்கு தாக்குப்பிடித்து களத்தில் நிற்பது பெரிய விஷயமாக இருக்கிறது.

    இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் லாதம் கூறுகையில் ‘‘கொல்கத்தாவில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். நீண்ட நேரம் பேட்டிங் செய்தால், அது கடினமாக இருக்கும். நீங்கள் நீண்ட நேரம் நீர் ஆதாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆக்லாந்தில் 14 முதல் 16 டிகிரி வெயில் இருக்கும். கொல்கத்தாவில் 30 டிகிரியாக இருக்கிறது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் வெயிலையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்று நினைத்தால், அதை தவறாக எடுக்கக்கூடாது’’ என்றார்.
    Next Story
    ×