search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுஹான் ஓபன் டென்னிஸ்: நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் அதிர்ச்சி தோல்வி
    X

    யுஹான் ஓபன் டென்னிஸ்: நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் அதிர்ச்சி தோல்வி

    யுஹான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கிவிடோவா 6-7 (10-12), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
    யுஹான்: 

    யுஹான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 3-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), 16-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 

    3 மணி 19 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் கிவிடோவா 6-7 (10-12), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஷிவ்டோவாவை (கஜகஸ்தான்) வெளியேற்றி கால்இறுதியை எட்டினார். 

    அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவிடம் (ரஷியா) வீழ்ந்தார். 

    Next Story
    ×