search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுஹான் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி வெற்றி
    X

    யுஹான் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி வெற்றி

    சீனாவில் நடந்து வரும் யுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றது.
    யுஹான் :

    முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மொத்தம் ரூ.17 கோடி பரிசுத் தொகைக்கான யுஹான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), செக்குடியரசின் மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். 2 மணி 14 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் கெர்பர் 6-7 (4-7), 6-1, 6-4 செட் கணக்கில் மிலாடெனோவிச்சை போராடி தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    அமெரிக்க ஓபனில் மகுடம் சூடிய பிறகு கெர்பர் கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும். அவரிடம் முதலிடத்தை பறிகொடுத்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தை காரணம் காட்டி இந்த போட்டியில் களம் காணவில்லை. அடுத்த வாரம் தொடங்கும் சீன ஓபனில் இருந்தும் பின்வாங்கியுள்ளார். இதனால் ஆண்டு இறுதிவரை 28 வயதான கெர்பர் முதலிடத்தில் தொடருவதில் கிட்டத்தட்ட ஆபத்து எதுவும் இருக்காது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜான்கோவிச் (செர்பியா) 6-4, 7-6 (2) என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் கார்பின் முகுருஜாவுக்கு (ஸ்பெயின்) அதிர்ச்சி அளித்தார். கிவிடோவா (செக்குடியரசு), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), வோஸ்னியாக்கி (டென்மார்க்) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா இணை நேரடியாக 2-வது சுற்றில் கால் பதித்தது. இவர்கள் 3-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் கேப்ரியலா டாப்ரோஸ்கி (கனடா)- மார்ட்டினஸ் சாஞ்செஸ் (ஸ்பெயின்) இணையை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினர். 
    Next Story
    ×