search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின், டோனி குறித்த கருத்து: சந்தீப் பட்டீல் மீது பி.சி.சி.ஐ. தலைவர் சாடல்
    X

    சச்சின், டோனி குறித்த கருத்து: சந்தீப் பட்டீல் மீது பி.சி.சி.ஐ. தலைவர் சாடல்

    சச்சின், டோனி ஆகியோரின் ஓய்வு குறித்து முன்னாள் தலைமை தேர்வாளர் சந்தீப் பட்டீல் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் ஓய்வு பெறாவிடில் அணியில் இடம்பிடித்திருக்கமாட்டார். அதுபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றபோது, அவரது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது என்று தனது பதவி காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சந்தீப் பட்டீல் நினைவு கூர்ந்தார்.

    தற்போது இந்த கருத்துக்கு பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனுராக் தாகூர் மேலும் கூறுகையில் ‘‘சந்தீப் பட்டீல் தற்போது முன்னாள் தேர்வுக்குழு தலைவர். அவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கக் கூடாது.

    அவரது பதவியில் இருக்கும்போது இதே கேள்விக்கு வேறுமாதிரி பதில் அளிதிருந்தார். தற்போது பதவிக் காலம் முடிந்த பின்னர் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளார். இதுபோன்று கருத்து தெரிவித்தது முற்றிலும் நியாயமற்றது.

    தேர்வு குறித்த நியாயமற்ற, தேவையற்ற கருத்துக்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவருடன் மேலும் நான்கு தேர்வாளர்கள் இருந்தனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. இதை அவர் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×