search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டையர் தர வரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் சானியா மிர்சா
    X

    இரட்டையர் தர வரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் சானியா மிர்சா

    பான் பசிபிக் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இரட்டையர் தர வரிசையில் சானியா மிர்சா முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.
    புதுடெல்லி :

    உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா (9,730 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். பான் பசிபிக் ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சானியா மிர்சா முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். 

    சானியாவின் முன்னாள் இணை ஆட்டக்காரரான சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் (9,725 புள்ளிகள்) 2-வது இடம் பெற்றுள்ளார். சானியாயுடன் இணைந்து தற்போது இரட்டையர் ஆட்டத்தில் விளையாடும் செக் குடியரசு வீராங்கனை பார்போரா 18-வது இடம் பிடித்துள்ளார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 18-வது இடத்தை பெற்றுள்ளார். 

    இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் 4 இடம் முன்னேறி 60-வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சகெத் மைனெனி 2 இடம் ஏற்றம் கண்டு 138-வது இடத்தை பிடித்துள்ளார். ராம்குமார் ராமநாதன் 10 இடங்கள் சரிவை சந்தித்து 229-வது இடம் பெற்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஏஞ்சலிக் கெர்பர் முதலிடத்தை தொடருகிறார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2-வது இடத்தை பெற்றுள்ளார். 
    Next Story
    ×