search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக பதக்கங்கள் பெற என்ன செய்ய வேண்டும்? ஜார்க்கண்ட் கவர்னர் யோசனை
    X

    அதிக பதக்கங்கள் பெற என்ன செய்ய வேண்டும்? ஜார்க்கண்ட் கவர்னர் யோசனை

    விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முன்னிலை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் யுக்தி குறித்து ஜார்க்கண்ட் ஆளுநர் யோசனை தெரிவித்துள்ளார்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 70-வது கிளென்மார்க் சீனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. மாநில ஆளுநர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    விளையாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து விளையாட்டு அமைப்புகள் ஆழமாக சிந்தித்து, வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வீரர்களுக்கு தேவையான வசதிகளை முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் அவர்களின் மன உறுதியை ஊக்குவிக்கும் பணிகளையும் செய்ய வேண்டும். அதன்மூலம் பதக்க பட்டியலில் நம்மால் முன்னிலை பெற முடியும்.

    ஜார்க்கண்ட் மாநில விளையாட்டு வீரர்கள் மிகவும் திறமையானவர்கள். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஒரு வீரர் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும்போது மக்களின் உணர்வுகளையும் தங்களுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். அனைத்து வீரர்களுமே பதக்கம் வெல்ல வேண்டும் என்றே விரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்திய நீச்சல் கூட்டமைப்புடன் இணைந்து ஜார்க்கண்ட் நீச்சல் சங்கம் நடத்தும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுமார் 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    Next Story
    ×