search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக வீரர் தேர்வு
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக வீரர் தேர்வு

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் புதுமுக வீரர் மொசட்டெக் ஹொசைன் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதன்முறையாக வங்காள தேசத்தில் சென்று கிரிக்கெட் தொடர் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் 25-ந்தேதி தொடங்குகிறது. 28-ந்தேதி 2-வது போட்டி நடக்கிறது.

    இதற்கான வங்காள தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ருபெல் ஹொசைன், ஷபியுல் இஸ்லாம் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் புதுமுக வீரர் மொசட்டெக் ஹொசைனும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காள தேச அணி:-

    1. மோர்தசா (கேப்டன்), 2. தமீம் இக்பால், 3. சவுமியா சர்கார், 4. மெஹ்முதுல்லா, 5. முஷ்பிஜூர் ரஹீம், 6. சாஹிப் அல் ஹசன், 7. சபீர் ரஹ்மான், 8. நசீர் ஹொசைன், 9. ருபெல் ஹொசைன், 10. இம்ருல் கெய்ஸ், 11. ஷபியூல் இஸ்லாம், 12. மொசட்டெக் ஹொசைன், 13. தைஜூல் இஸ்லாம்.

    வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமது மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அராபத் ஷன்னி ஆகியோர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதால் சர்வதேச போட்டியில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் தங்களது பந்து வீச்சை சரிசெய்துள்ளனர். ஐ.சி.சி. அவர்களை பந்து வீச அனுமதித்தால் ஆப்கானிஸ்தான் தொடரில் இடம்பெறுவார்கள்.
    Next Story
    ×