search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: அதிர்ஷ்டத்தால் அவுட்டில் இருந்து தப்பிய லாதம், கேன் வில்லியம்சன்
    X

    வீடியோ: அதிர்ஷ்டத்தால் அவுட்டில் இருந்து தப்பிய லாதம், கேன் வில்லியம்சன்

    கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணியின் லாதம் மற்றும் கேன் வில்லியம்சன் அதிர்ஷ்டத்தால் அவுட்டில் இருந்து தப்பினார்கள்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர் குப்தில் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லாதம் - கேன் வில்லியம்சன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.

    ஆட்டத்தின் 32-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை கேன் வில்லியம்சன் சந்தித்தார். அப்போது அஸ்வின் திடீரென பவுன்சராக வீசிய பந்தை வில்லியம்சன் சந்தித்தார். அப்போது அவரது ஹெல்மெட்டின் பின்பக்க உதிரி பாகம் உடைந்து ஸ்டம்பில் தாக்கியது. ஆனால், ஸ்டம்பின் மேல் உள்ள பெய்ல்ஸ் கீழே விழாததால் 39 ரன்னில் இருந்து வில்லியம்சன் தப்பித்தார்.

    அதன்பின் 37-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை லாதம் சந்தித்தார். அவர் பந்தை ஷார்ட் லெக் திசையில் அடித்தார். பந்து பேட்டில் பட்டு அவரது கால் ஷூ மீது தாக்கி லோகேஷ் ராகுலிடம் கேட்ச் ஆனது. ஆனால் பந்து லோகேஷ் ராகுலின் ஹெல்மெட்டின் கம்பியை சற்று உரசியது. இதனால் லாதம் 37 ரன்னில் இருந்து தப்பித்தார். ஐ.சி.சி. விதிமுறைப்படி ஹெல்மெட் மீது பந்து தாக்கியபின் கேட்ச் பிடித்தால் அது கேட்ச் என எடுத்துக்கொள்ளமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×