search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு: செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன்
    X

    அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு: செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன்

    அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள் இடையேயான மண்டல (3) விளையாட்டுப் போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள் இடையேயான மண்டல (3) விளையாட்டுப் போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 580 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 14-வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    தடகளம், பேட்மின்டன், பால்பேட்மின்டன், கூடைப்பந்து, செஸ், கைப்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் (இருபாலர்), ஆக்கி, கபடி (ஆண்கள் மட்டும்) ஆகிய போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றது.

    எஸ்.எஸ்.என். கல்லூரி 380 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
    Next Story
    ×