search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் முதல் ஆக்சன் பேன்டஸி லீக்கை தொடங்கி வைத்தார் அஸ்வின்
    X

    உலகின் முதல் ஆக்சன் பேன்டஸி லீக்கை தொடங்கி வைத்தார் அஸ்வின்

    உலகின் முதல் ஆக்சன் பேன்டஸி லீக் என்ற கற்பனை கிரிக்கெட் லீக் தொடரை இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடங்கி வைத்தார்.
    இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதேபோல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான அணி முதலில் ஏலம் விடப்படும். அதன்பின் அந்த அணி உரிமையாளர்கள் வீரர்களை தேர்வு செய்வார்கள். இந்த நடைமுறை பார்ப்பதற்கு சுவராஸ்யமாக இருக்கும். இந்த அணியின் உரிமையாளராக நாம் இருந்து வீரர்களை தேர்வு செய்தால், அந்த உணர்வு எப்படி இருக்கும்...?

    அந்த உணர்வை ரசிகர்களிடையே ஏற்படுத்துவதற்காக பல்வேறு இணைய தளங்கள், கற்பனையாக வீரர்களை ஏலம் எடுத்து விளையாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த வெப்சைட்டில் ரசிகர்கள் சென்று தங்களது கற்பனை அணியை தேர்வு செய்து விளையாடி ரசிக்கலாம்.

    தற்போது ரசிகர்களுக்காக ஒரு கற்பனை லீக்கை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், விஸ்டன் இந்தியாவுடன் இணைந்து உருவாக்கி, உலகின் முதல் ஆக்சன் பென்டஸி லீக்கை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

    இந்த லீக்கில் நீங்கள் விளையாட வேண்டுமென்றால், www.cric-trade.com என இணைய தளத்தில் லாக்-இன் செய்து உங்கள் அணியை நீங்கள் ஏலம் மூலம் எடுக்க வேண்டும். அதன்பின் உங்களுக்கு ஒதுக்கிய 60 கோடி ரூபாயில் பிடித்தமான வீரர்களை தேர்வு செய்யலாம். வீராட் கோலி உள்பட முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க முடியும். ஆனால், ஒருவர் விராட் கோலியை ஏலம் எடுத்து விட்டால், மற்றவர் அவரை ஏலத்தில் எடுக்க முடியாது (மற்ற போட்டிகளில் ஒருவரை எத்தனை அணி வேண்டுமென்றாலும் ஏலம் எடுக்கலாம்).

    இதில் போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் ஒன்றரை மணி நேரம் ஏலம் நடக்கும். இந்த விளையாட்டு போட்டி நடக்கும் நாளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டி நடக்கும் முன்பும் அந்தந்த நாட்களுக்கு புதிய வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

    இந்திய பிரிமீயர் லீக் தொடருக்கான பேன்டஸி லீக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
    Next Story
    ×