search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈட்டி எறிதலில் தங்கம்: தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா
    X

    ஈட்டி எறிதலில் தங்கம்: தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா

    இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தங்கம் வென்றார். இதன்மூலம் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
    போலந்து நாட்டில் 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தடகள் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் 18 வயதான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

    இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதல் இடம்பிடித்தார். இதன்மூலம் உலக சாம்பயின்ஷிப் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு அடுத்தாற்போல் தென்ஆப்பிரிக்கா வீரர் ஜோகன் கிராப்லெர் 80.59 மீட்டர் தூரம் வீசி 2-வது இடம் பிடித்தார். இருவருக்கும் இடையில் சுமார் 6 மீட்டர் தூரம் வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கிரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 79.69 மீட்டர் தூரம் வீசி 3-வது இடத்தைப்பிடித்தார்.

    2012 ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவரான ட்ரினிடாட் அண்டு டொபாகோ வீரர் இந்த வருடத்தில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வியக்கத்தக்க தூரத்திற்கு ஈட்டியை எறிந்தாலும் அவருக்கு ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற 83 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிதல் வேண்டும் என்பது விதி. ஆனால், நீரஜ் அந்த 82.23 மீட்டர் தூரமே வீசியிருந்தார்.

    தற்போது விதிப்படி 20 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தடகளத்தில் தங்கம் வென்றவர்கள் நேரடியாக ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் முடிந்து விட்டதால் நீரஜ் சோப்ராவில் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது.

    உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் சாதனைப்படைத்தது குறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில் ‘‘இரண்டாவது முறையாக நான் எறியும்போது, ஈட்டி எனது கையில் இருந்த விலகியபோது இது சிறந்த எறிதலாக (Throw) இருக்கும் என்று கருதினேன். ஆனால், 86 மீட்டர் தூரத்தை கடந்து செல்லும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக நான் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன். இதற்கு இன்று பலன் கிடைத்துள்ளது’’ என்றார்.
    Next Story
    ×