search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 589 ரன்கள் குவித்து டிக்ளேர்- ஜோ ரூட் 254 விளாசினார்
    X

    2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 589 ரன்கள் குவித்து டிக்ளேர்- ஜோ ரூட் 254 விளாசினார்

    ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. கேப்டன் அலைஸ்டர் குக் சதம் அடித்து 105 ரன்னில் அவுட் ஆனார். இது அவரின் 29-வது சதமாகும். குக்கை தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரூட் 141 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுவருகிறது. தொடர்ந்து விளையாடிய வோக்ஸ் அரைசதம் அடித்து 58 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 150 ரன்னைக் கடந்தார். தொடர்ந்து பந்துகளை விளாசிய அவர் தனது 2-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 355 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரிகளுடன் இரட்டை சதத்தை எட்டினார். ஸ்டோக்ஸ 34 ரன்கள் எடுத்த நிலையில் வகாப் ரியாஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட்டின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 400, 500 என உயர்ந்தது. இறுதியாக அணியின் ஸ்கோர் 577 ரன்னாக இருக்கும்போது ஜோ ரூட் 254 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது அவரின் தனிப்பட்ட முறையில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அப்போது இங்கிலாந்து அணி 152.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் அறிவித்தார். இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பாகிஸ்தான் சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டும், அமிர் மற்றும் ரஹத் அலி தலா இரண்டு விக்கெட்டும், யாசீர் ஷா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 
    Next Story
    ×