search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வாளர்கள் குல்தீப் யாதவ் மீது ஒரு பார்வை வைக்க வேண்டும்: கவாஸ்கர்
    X

    தேர்வாளர்கள் குல்தீப் யாதவ் மீது ஒரு பார்வை வைக்க வேண்டும்: கவாஸ்கர்

    கொல்கத்தா அணிக்காக விளையாடிய லெக் ஸ்வின்னர் குல்தீப் யாதவ் மீது இந்திய அணியின் தேர்வாளர்கள் ஒரு பார்வை வைக்க வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
    கொல்கத்தா அணி கடைசி லீக் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. நேற்று நடைபெற்ற இந்த சுற்றில் அதே ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி குவாலிபையர் 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

    கொல்கத்தா அணியின் முன்னணி லெக் ஸ்பின்னரான பியூஸ் சாவ்லா காயம் காரணமாக இந்த இரண்டு போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்குப்பதிலாக லெக் ஸ்பின்னரான உத்தர பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 21 வயதான இளம் வீரர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

    வாழ்வா? சாவா? என்ற லீக் போட்டியில் தவான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். 51 ரன்கள் எடுத்த அவரை குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி அவுட்டாக்கினார். மேலும், வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன் நேற்று நடைபெற்ற போட்டியில் வார்னர், ஹென்றிக்ஸ் மற்றும் கட்டிங் ஆகியோரை வெளியேற்றினார்.

    இவரது பந்து வீச்சு டிவி வர்ணனையாளரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் ஆன கவாஸ்கரை ஈர்த்துள்ளது. இதனால் குல்தீப் யாதவ் மீது தேர்வாளர்கள் ஒரு பார்வை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘குல்தீப் மிகவும் கவர்ச்சிக்கரமாக பந்து வீசக்கூடியவர். என்னுடைய தாழ்மையான அறிவுரை என்னவென்றால், இந்திய அணியின் தேர்வாளர்கள் இந்த இளம் வீரர் மீது ஒரு கண் வைக்க வேண்டும். உண்மையில், குல்தீப் யாதவ் வேறுபட்ட வகையான பந்து வீச்சாளர். அவரை நீங்கள் பொறுமையாக கையாள வேண்டும். வருங்காலத்தில் வேறுபட்ட வகையான இந்த பந்து வீச்சாளரால் நீங்கள் போட்டிகளை வெல்ல முடியும். அவர் மீது நீங்கள் கண்டிப்பாக ஒரு பார்வை வைத்திருக்கனும்’’ என்று கூறியுள்ளார்.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், ஆடும் லெவனில் களம் இறங்கவில்லை.
    Next Story
    ×