search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை டிராவிட் சிறப்பாக செய்வார்: வாட்சன்
    X

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை டிராவிட் சிறப்பாக செய்வார்: வாட்சன்

    இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தால், அவர் சிறப்பான முறையில் அந்த பணியைச் செய்வார் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தால், அவர் சிறப்பான முறையில் அந்த பணியைச் செய்வார் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வாரியம் டங்கன் பிளெட்சருக்குப்பின் தலைமை பயிற்சியாளரை நியமிக்காமல் இருக்கிறது. அதற்கு தகுந்த நபரை தேடிக்கொண்டு வருகிறது. இதற்கென ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவில் கங்குலி, தெண்டுல்கர், லஷ்மண் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தனர். ஆனால், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். இதனால் யாரை நியமிப்பது என்று ஐ.சி.சி. யோசனை செய்து வருகிறது.

    இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ராகுல் டிராவிட்டைதான் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். அவரை விட சிறந்த நபரை உங்களால் தேட முடியாது என்று கூறினார்கள்.

    இந்நிலையில் ஷேன் வாட்சனும் இதே கருத்தைதான் கூறியுள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘முதல் பாயிண்ட் என்னவெனில் தகுதி வாய்ந்த ராகுல் டிராவிட்டை பற்றி எந்தவொரு சந்தேகமும் இல்லை. ராஜஸ்தான் ராயல் அணியில் அவருடன் சேர்ந்து விளையாடும்போது, அவரிடம் இருந்து கிரிக்கெட் திறமைகளை தெரிந்து கொண்டேன் என்பதால் நான் மிகப்பெரிய அதிரஷ்சாலி.

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை அவரிடம் கொடுத்தால், அற்புதமான அந்த வேலையை அவர் சிறப்பான முறையில் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், ஐ.பி.எல். தொடரில் அபாரமாக வளர்ந்து வந்துள்ள விராட் கோலியுடன் இணைந்து மிகப்பெரிய சாதனைப்படைக்கலாம். அவர் ஒரு அற்புதமான மனிதன். இளைஞர்களுக்கு அபரிதமான ஆட்ட நுனுக்கங்களை சொல்லிக்கொடுத்துள்ளார்’’ என்றார்.

    இதற்கிடையே இன்னும் இரண்டு மாதத்திற்குள் பயிற்சியாளரை தேர்வு செய்துவிடுவோம் என்று பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×