search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியுடன் மோதுவது யார்? குஜராத்-ஐதராபாத் நாளை பலப்பரீட்சை
    X

    இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியுடன் மோதுவது யார்? குஜராத்-ஐதராபாத் நாளை பலப்பரீட்சை

    ஐ.பி.எல் போட்டியின் 'குவாலிபையர் 2' ஆட்டத்தில் குஜராத்-ஐதராபாத் நாளை மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியுடன் விளையாடும்.

    9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9–ந்தேதி தொடங்கியது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் கடந்த 22–ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

    இதன் முடிவில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வார்னரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன் னேறின.

    ‘பிளே ஆப்’ சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. பெங்களூரில் நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 22 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இதன்மூலம் ஐதராபாத் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இதில் அந்த அணி குஜராத் லயன்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் டெல்லி பெரோசோ கோட்லா மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியை சந்திக்கும். இறுதிப்போட்டி 29–ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

    Next Story
    ×