search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?
    X

    வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?

    மும்பை, டெல்லிக்கு எதிராக தோல்வியை தழுவிய கொல்கத்தா அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.
    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் கடைசி இரு ஆட்டங்களில் குஜராத், ஐதராபாத்துக்கு எதிராக தோற்றதும் அடங்கும். பெங்களூரு அணி பேட்டிங் வரிசையில் பலம் வாய்ந்ததாக விளங்கினாலும், பந்து வீச்சு பலவீனமாக இருப்பதால் அது வீறுநடைக்கு தடைக்கல்லாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் களம் காணுவார் என்று தெரிகிறது. தோல்விப்பயணத்துக்கு சொந்த ஊரில் முடிவு கட்ட பெங்களூரு வீரர்கள் கடுமையாக முயற்சிப்பார்கள்.

    முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசி இரு ஆட்டங்களில் மும்பை, டெல்லிக்கு எதிராக தோல்வியை தழுவிய கொல்கத்தா அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. இந்த ஆட்டம் பெங்களூருவின் பேட்டிங் சூரர்களுக்கும், கொல்கத்தாவின் மிரட்டல் பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான மோதலாக இருக்கும்.
    Next Story
    ×