search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. டி20 உத்தேச அணி வெளியீடு: விராட் கோலி கேப்டனாக தேர்வு
    X

    ஐ.சி.சி. டி20 உத்தேச அணி வெளியீடு: விராட் கோலி கேப்டனாக தேர்வு

    ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டி20-க்கான 11 பேர் கொண்ட உத்தேச அணியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டி20-க்கான 11 பேர் கொண்ட உத்தேச அணியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சர்வதேச உத்தேச அணிகளை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இதில் ஆண்களுக்கான அணியில் விராட் கோலி கேப்டனாக தேர்வாகியுள்ளார். விக்கெட் கீப்பராக தென் ஆப்பிரிக்க அணியின் டி காக் இடம்பெற்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த ஆஷிஸ் நெக்ரா தேர்வாகியுள்ளார்.

    இதேபோல் வெஸ்ட் அணியின் ஸ்டாபனை டெய்லரை கேப்டனாக கொண்ட பெண்கள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் அணியில் இந்தியாவை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. நியூசிலாந்து அணியை சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    ஐசிசி சர்வதேச டி20 தேர்வு குழுவில், ஐ.சி.சி.யின் பொது மேலாளர் ஜியோப் அல்லர்டிஸ், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப், இங்கிலாந்து அணியின் முன்னாள் நசீர் ஹூசைன், முன்னாள் ஆஸ்திரேலியா வீராங்கனை மெல் ஜோன்ஸ், இந்தியாவின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் லிசா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.   

    ஆண்கள் அணி விவரம்:

    ஜாசன் ராய் (இங்கிலாந்து), டி காக் (தென் ஆப்பிரிக்கா, கீப்பர்), விராட் கோலி(இந்தியா, கேப்டன்), ஜோ ரூட்(இங்கிலாந்து), ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து), ஷேன் வாட்சன்(ஆஸ்திரேலியா), ஆந்த்ரே ரஸ்ஸல்(வெஸ்ட் இண்டீஸ்), மிட்செல் சான்ட்னெர் (நியூசிலாந்து), டேவிட் வில்லி(இங்கிலாந்து), சாமுவேல் பத்ரீ(வெஸ்ட் இண்டீஸ்), ஆஷிஸ் நெக்ரா(இந்தியா). 12-வது நபராக வங்கதேசம் அணியின் முஸ்தபிஜூர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×