search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதிகள் பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும்: அட்டார்னி ஜெனரல் வேணுகோபால்
    X

    நீதிபதிகள் பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும்: அட்டார்னி ஜெனரல் வேணுகோபால்

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை வருகிற திங்கள்கிழமைக்குள் தீர்க்கப்படும் என அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். #AttorneyGeneral #SupremeCourtcrisis

    புதுடெல்லி: 

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன், ஜோசப் ஆகியோர் நேற்று முதல் முறையாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்கலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்திய நீதித்துறை வரலாற்றில் இது போன்று நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து பிரதமர் மோடி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

    உச்சநீதிபதிகளிடையே ஏற்பட்டு கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய பார் கவுன்சில் சார்பில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.



    இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வரும் திங்கட்கிழமைக்குள் நீதிபதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டு, அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒன்றாக இணைவார்கள் என்று தெரிவித்தார். அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த நீதிபதிகள் இப்பிரச்சனையை மேலும் வளர்க்க மாட்டார்கள் என்றுதாம் நம்புவதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

    நாளை அதிருப்தியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேரையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்திப்பார் என கூறப்படுகிறது. வழக்குகளை ஒதுக்குவதில் மிகுந்த பாராபட்சம் காட்டப்படுவது தான் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது இருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது. #AttorneyGeneral #KKVenugopal #SupremeCourtcrisis #DemocracyinDanger #tamilnews
    Next Story
    ×