search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல்: நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு
    X

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல்: நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்ய 7 பேர் அடங்கிய குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. #SupremeCourtJudges #BarCouncil #DemocracyinDanger

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன், ஜோசப் ஆகியோர் நேற்று முதல் முறையாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்கலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்திய நீதித்துறை வரலாற்றில் இது போன்று நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து பிரதமர் மோடி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.



    இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல் குறித்து இந்திய பார் கவுன்சில் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக தலைமைநீதிபதி தீபக் மிஸ்ராவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்ய வேண்டும். இந்த பிரச்சனை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். ஆனால் மக்கள் மத்தியில் கொண்டுவரும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை, என கூறினார். 

    இந்த குழுவினர் நாளை நீதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது#SupremeCourtJudges #BarCouncil #DemocracyinDanger #tamilnews
    Next Story
    ×