search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்ல வேண்டாம்: வெங்கையா நாயுடு
    X

    முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்ல வேண்டாம்: வெங்கையா நாயுடு

    பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
    திருமலை:

    ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.

    இன்று காலை திருமலையில் வராக சுவாமியை தரிசித்துவிட்டு ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினார்.



    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

    2018 ம் ஆண்டு துவக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஏழுமலையானை குடும்பத்தாருடன் துணை ஜனாதிபதியாக வந்து தரிசனம் செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    இந்த நாளில் மக்கள் ஜாதி மத பேதம் இன்றி சுகமாக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். தேவஸ்தானம் அனைவருக்கும் மிக நல்ல முறையில் வசதிகள் செய்து வருகின்றது.

    வைகுண்டம் வழியாக சென்று குடும்பத்தாருடன் தரிசித்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவே நான் அடிக்கடி கோவிலுக்கு செல்ல மாட்டேன். முக்கிய பிரமுகர்களும் அடிக்கடி கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதனால் சாதாரண பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் கிடைக்கும்.

    இந்து என்பதை மதமாக பார்க்காமல் வாழ்வியல் நடைமுறையாக பார்க்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews


    Next Story
    ×