search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.
    X
    நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.

    வங்கி பரிவர்த்தனையில் மராத்தி மொழி: அதிகாரிகளுக்கு நவநிர்மாண் சேனா கடிதம்

    வங்கி பரிவர்த்தனையில் மராத்தி மொழி இடம்பெற வேண்டும் என்று வங்கி அதிகாரிகளிடம் மராட்டிய நவநிர்மாண் சேனா கடிதம் அளித்தது.
    மும்பை:

    மும்பையில் எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பால விபத்தை தொடர்ந்து, சட்டவிரோதமாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்த நடைபாதை வியாபாரிகளை மராட்டிய நவநிர்மாண் சேனா தொண்டர்கள் விரட்டியடித்தனர்.

    இந்த நிலையில், அக்கட்சியின் கவனம் வங்கிகள் பக்கம் திரும்பி இருக்கிறது. வங்கி பரிவர்த்தனையில் மராத்தி மொழியும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த கோரி நேற்று அக்கட்சி நிர்வாகிகள் மும்பையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி அதிகாரிகளை சந்தித்து கடிதம் கொடுத்தனர். மும்பையில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்படும் என்று அவர்கள் கூறினர்.

    கடிதத்தில், “மராத்தி மராட்டியத்தின் ஆட்சி மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால், மாநிலத்தின் அனைத்து முறையான நடவடிக்கைகளும் மராத்தியில் நடைபெற வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வங்கிகள் அதன் பரிவர்த்தனையை மற்ற மொழிகளில் மேற்கொள்ளலாம். இதில் மராத்தியும் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

    நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த சனிக்கிழமை தானேயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, வங்கிகள் அந்தந்த மாநில மொழிகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய போதிலும், வங்கிகள் மராத்தியை புறக்கணிப்பதாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×