search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடும் எதிர்ப்பு எதிரொலி: ஓட்டல் பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு- மத்திய அரசு முடிவு
    X

    கடும் எதிர்ப்பு எதிரொலி: ஓட்டல் பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு- மத்திய அரசு முடிவு

    பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஓட்டல் பண்டங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுப்படுகிறது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வருவதற்காக ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தியது.

    இதனால் விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில் ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை கடுமையாக அதிகரித்தது. இதுபோல் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.

    ஓட்டல்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சேவை வரிக்குப் பதில்தான் ஜி.எஸ்.டி. வரியை வசூலிக்க வேண்டும். ஆனால் சேவை வரியை கழிக்காமல் சேவை வரியுடன் சேர்த்து ஜி.எஸ்.டி. வரியையும் சேர்த்து வசூலித்ததால் இட்லி- தோசை மற்றும் உணவுப் பண்டங்களின் விலை உயர்ந்தது. பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஓட்டல் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். என்றாலும் ஓட்டல்களில் விலை குறைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஓட்டல் உணவு பண்டங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    தற்போது ஓட்டல்களுக்கு (ரெஸ்டாரண்ட்) விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும் உள்ளீட்டு வரிகளும் திரும்ப பெறப்படுகிறது. இதனால் ஓட்டல் பண்டங்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி மத்திய அரசு அதிகாரி கூறும்போது, “ரெஸ்டாரண்டுகள் ஜி.எஸ்.டி. வரியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக் கூடாது. உள்ளீட்டு வரியின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் ஓட்டல்களே தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றன. உள்ளீட்டு வரியின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காததால் அவர்கள் விலை கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.



    ரெஸ்டாரண்டுகளில் ஆண்டுக்கு ரூ. 1 கோடி வரி வணிகம் இருந்தால் அதற்கு 5 சதவீதமும், அதற்கு மேல் வணிகம் ஈட்டும் ஓட்டல்களுக்கு 12 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. 5 நட்சத்திர ஓட்டல்களுக்கான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

    தற்போது ஏ.சி. ஓட்டல்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், ஏ.சி. அல்லாத ஓட்டல்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. வரி விகித மாற்றங்கள் குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×