search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருப்பது கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
    X

    ரெயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருப்பது கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

    அனைத்து ரெயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் இந்திய ரெயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரெயிலில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் கொண்ட மருத்துவக்குழு இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கார் மற்றும் டீ.ஒய். சந்திரசந்த் மூவர் கொண்ட அமர்வானது விசாரித்தது.

    ரெயிலில் மருத்துவர் இருப்பது என்பது சாத்தியமில்லாததாகும். மேலும் மருத்துவ கருவிகளை வைக்க முடியாது. இதற்கு முன் நடைமுறைக்கு வந்த பைலட் திட்டம் தோல்வியில் முடிந்தது. மருத்துவ உபகரணங்களை ரெயிலில் கொண்டு செல்லும்போது அதன் பயங்கரமான சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக பயன்படுத்த முடியவில்லை.

    மேலும், ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் மருந்தகம் மற்றும் மருத்துவ உதவியாளரை நியமிக்க திட்டம் கொண்டு வந்தது. அந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது என மூத்த வழக்கறிஞர் அஜிட் சின்கா ரெயில்துறை சார்பில் வாதாடினார்

    அவரின் விவாதத்தை கேட்டறிந்த அமர்வு, ரெயிலில் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அல்லது உதவியாளர்களை நியமிப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவர்கள் உதவுவார்கள் என தெரிவித்தது.

    ரெயிலில் மருத்துவ சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருப்பது கட்டாயம். அதன் அடிப்படையில் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பயணிகளில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அது குறித்து உடனடியாக டி.டி.ஆர். அல்லது உதவியாளருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கு தகவல் அளிப்பார்கள். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டதது.
    Next Story
    ×