search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019-ம் ஆண்டிற்குள் கங்கையில் கழிவுகள் கலப்பது தடுத்து நிறுத்தப்படும் - யோகி ஆதித்யாநாத்
    X

    2019-ம் ஆண்டிற்குள் கங்கையில் கழிவுகள் கலப்பது தடுத்து நிறுத்தப்படும் - யோகி ஆதித்யாநாத்

    புனித ஆறான கங்கையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கலப்பதை தடுக்கும் புதிய செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் ஈஷா அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் தனது திட்டங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    கங்கை ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கலப்பதை தடுக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டு கும்பமேளாவிற்குள் கங்கை ஆறில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கலப்பது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.

    மாநிலத்தில் உள்ள 25 மாவட்டங்களின் வழியாக கங்கை ஆறு செல்கிறது. பிரதமரின் நாமாமி கங்கா என்ற திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் முதல் பணியாக ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமப்புறங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கி உள்ளோம். மேலும், ஆற்றின் கரையோரங்களில் மரம் நடும் பணியையும் தொடங்கி வைத்துள்ளோம். மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் 6 கோடிக்கும் அதிகமான மரங்களை நடும் பணியில் அனைத்து மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×