search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்று மாசுபடுதலை தடுக்க தொழிற்சாலை கழிவிலிருந்து உலோகம் எடுக்கும் புதிய ஆலை
    X

    காற்று மாசுபடுதலை தடுக்க தொழிற்சாலை கழிவிலிருந்து உலோகம் எடுக்கும் புதிய ஆலை

    பஞ்சாபில் காற்று மாசுபடுதலை தடுக்க தொழிற்சாலை கழிவிலிருந்து உலோகம் எடுக்கும் புதிய ஆலையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கே.எஸ்.பன்னு தொடங்கி வைத்தார்.
    சண்டிகர்:

    பஞ்சாபின் இரும்பு நகரம் என்று அழைக்கப்படும் கோபிந்காரில் பல இரும்பு தொழிற்சாலைகள் உள்ளன. அதிலிருந்து வெளியிடப்படும் புகையால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. புகையில் அதிக அளவு உலோக துகள்கள் உள்ளன. இக்காற்றை சுவாசிப்பதன் மூலம் மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

    இந்நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு அங்குள்ள இரும்பு தொழிற்சாலையில் கழிவிலிருந்து துத்தநாகத்தை பிரித்து எடுக்கும் புதிய ஆலை ஒன்றை அமைத்துள்ளனர். இந்த ஆலையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கே.எஸ்.பன்னு தொடங்கி வைத்தார். இந்த ஆலையானது, புகையில் உள்ள துகள்களை பிரித்தெடுத்து சுகாதாரமான காற்றை வெளிவிடும். இதனால் 70 சதவீதம் மாசுபாடு குறைக்கப்படுகிறது. இதன்மூலம் தினமும் வெளியிடப்படும் 10 டன் கழிவிலிருந்து 4 டன் துத்தநாகத்தை பிரித்தெடுக்கலாம்.

    இந்த ஆலையை 2.5 கோடி ரூபாய் செலவில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ளது. இதே போன்று மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நகரங்களிலும் இந்த ஆலை அமைக்கப்படும் என பன்னு தெரிவித்தார்.

    Next Story
    ×