search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபல எழுத்தாளர் அருன் சாது உடல்நலக்குறைவால் காலமானார்
    X

    பிரபல எழுத்தாளர் அருன் சாது உடல்நலக்குறைவால் காலமானார்

    பத்திரிக்கையாளராகவும், பிரபல எழுத்தாளராகவும் திகழ்ந்த அருன் சாது (76) இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.
    மும்பை:

    கடந்த 1942-ம் ஆண்டில் பிறந்த அருன் சாது பல்வேறு ஆங்கில பத்திரிக்கைகளில் பணியாற்றியவர். புனே பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராகவும் திறம்பட செயல்பட்டவர். இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை அருன் சாது எழுதியுள்ளார்.

    குறிப்பாக சிவசேனா கட்சியின் எழுச்சி, சீன புரட்சி, வியட்நாம் போர் போன்ற புத்தகங்கள் இன்றளவும் பிரபலமாக பேசப்படுகின்றன. பாரதிய பாஷா பரிஷாத், கேல்கர் மற்றும் ஆச்சார்யா அட்ரே ஆகிய விருதுகளையும் அருன் சாது பெற்றுள்ளார்.

    அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாசிரியராகவும் அருன் சாது தனது திறமையை வெளிக்காட்டியவர். இந்நிலையில், இதயநோய் காரணமாக நேற்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
    Next Story
    ×